"செல்பி வீடியோ" வெளியிட்டு ஆளுங்கட்சிப் பிரமுகர் தற்கொலை.. கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி பறிபோனதால் விபரீத முடிவு

0 2328
"செல்பி வீடியோ" வெளியிட்டு ஆளுங்கட்சிப் பிரமுகர் தற்கொலை.. கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி பறிபோனதால் விபரீத முடிவு

ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய பதவி போன காரணத்தால் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் செல்பி வீடியோ பதிவேற்றம் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குப்பம் நகரை சேர்ந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான பார்த்தசாரதி, அங்குள்ள கங்கம்மா ஆலய அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்து வந்தார்.

நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி, அவரை திடீரென்று பதவி நீக்கம் செய்தனர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து பார்த்தசாரதி தற்கொலை செய்து கொண்டார்.

ஆலய அறங்காவலர் குழு தலைவர் பதவியைப் பெறுவதற்காக பல்வேறு வகைகளில் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் பார்த்தசாரதி குறிப்பிட்டிருக்கும் நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments